\
A R Rahman is a amaze to me says Buchi Babu
Buchi Babu SanaX

ம்யூசிக் என சொல்லக்கூட வராது; என் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை! - புஜ்ஜி பாபு சனா | Peddi

என்னுடைய சீனியர்கள் சென்னையில் இருந்த காலத்தை பற்றி சொல்வதுண்டு. அவற்றை எல்லாம் கேட்கையில் எனக்கும் அந்த சென்னை அனுபவம் கிடைக்க வேண்டும் என ஆசையாக இருந்தது.
Published on

ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா நடித்துள்ள படம் `பெத்தி'. இப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று சென்னையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் புஜ்ஜி பாபு சனா "எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்த மனிதர்கள் அனைவரும் இங்கு இருக்கிறார்கள், ரஹ்மான் சார், ரத்னவேல் சார், தேவி ஸ்ரீ பிரசாத் சார். சென்னையில் தியேட்டரில் மட்டுமல்ல, சென்னையில் காலெடுத்து வைத்தாலே சினிமா தெரியும். சினிமா நபர்கள் என்றாலும், சினிமா என்றாலும் இங்கு எல்லோருக்கும் பிடிக்கும்.

என்னுடைய சீனியர்கள் சென்னையில் இருந்த காலத்தை பற்றி சொல்வதுண்டு. அவற்றை எல்லாம் கேட்கையில் எனக்கும் அந்த சென்னை அனுபவம் கிடைக்க வேண்டும் என ஆசையாக இருந்தது. ரஹ்மான் சாரை சந்திக்க சென்னை செல்கிறேன் என சொல்லும்போது எதோ சொந்த ஊருக்கு கிளம்புவது போல ஒரு உணர்வு வரும். எனக்கு மிகவும் பிடித்த விஜய் சேதுபதி சார் கூட இங்குதான் இருக்கிறார். அவர் என்னுடைய முதல் படத்தில் நடித்தார், உங்கள் ஆதரவுக்கு நன்றி சார்.

இப்போது இந்தப் படம் பற்றி சொல்கிறேன். பெத்தி மிகவும் எமோஷனலான ட்ராமா. உங்களை கட்டிப்போடும் அளவுக்கு படம் இருக்கும். சரண் சாரின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். படம் பார்த்தவர்கள் அனைவரும் மிகவும் புகழ்ந்து சொல்கிறார்கள். என்னை நம்பிய சரண் சாருக்கு நன்றி. ரஹ்மான் சார் உங்களை பற்றி நான் ஒரு புத்தகமே எழுதுவேன். உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். சிறு வயதில் இருந்து உங்களின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போது எனக்கு ம்யூசிக் என சொல்லக்கூட வராது, மீசிக் என்று தான் சொல்வேன். எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அப்படி இருந்த நான் உங்களுடன் பணியாற்றுவேன் என்பது கனவிலும் நினைக்காத ஒன்று. பார்வையாளர்கள் என்னுடைய `உப்பேனா' படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவை இந்தப் படத்துக்கும் தாருங்கள் நன்றி" என்றார்.

A R Rahman is a amaze to me says Buchi Babu
"அவர் சொன்னதும் கண்கலங்கிவிட்டேன்!" - உருவ கேலி பேச்சு பற்றி ஊர்வசி | Urvashi
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com