9 விருதுகள் அள்ளிய `மஞ்ஞுமல் பாய்ஸ்': 55வது கேரள மாநில திரைப்பட விருதுகள் முழுப்பட்டியல்!
55வது கேரள மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மீன்வளம் கலாசாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் திருச்சூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் 55வது கேரள மாநில திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்தார். மூத்த நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான ஏழு பேர் கொண்ட நடுவர் குழு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது. 2024 ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 128 படங்கள் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டன, அவற்றில் 26 படங்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன.
சிறந்த நடிகருக்கான விருது `பிரமயுகம்' படத்திற்காக மம்மூட்டிக்கும், சிறந்த நடிகைக்கான விருது `Feminichi Fathima' படத்துக்காக ஷ்யாம்ளா ஹம்ஸாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை, சிறந்த கலை இயக்கம், இதில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உட்பட 9 விருதுகளை வென்றிருக்கிறது சிதம்பரம் இயக்கிய `மஞ்ஞுமல் பாய்ஸ்'.
55வது கேரள மாநில திரைப்பட விருதுகள் வென்றவர்களின் முழுப் பட்டியல் இங்கே:
சிறந்த படம்: மஞ்ஞுமல் பாய்ஸ் (Manjummel Boys)
சிறந்த நடிகர்: மம்மூட்டி, பிரமயுகம் (Mammootty, Bramayugam)
சிறந்த நடிகை: ஷ்யாம்ளா ஹம்ஸா ஃபெமினிச்சி பாத்திமா (Shamla Hamza, Feminichi Fathima)
சிறந்த இயக்குநர்: சிதம்பரம் எஸ் பொடுவல், மஞ்ஞுமல் பாய்ஸ் (Chidambaram S Poduval, Manjummel Boys)
சிறந்த படம் (2ம் இடம்): ஃபெமினிச்சி பாத்திமா (Feminichi Fathima)
சிறந்த அறிமுக இயக்குநர்: ஃபாசில் முஹம்மத், ஃபெமினிச்சி பாத்திமா (Fasil Muhammed, Feminichi Fathima)
சிறந்த ‘பிரபலமான திரைப்படம்: பிரேமலு (Premalu)
சிறந்த ஒலி வடிவமைப்பு: ஷிபின் மெல்வின் மற்றும் அபிஷேக் நாயர், மஞ்ஞுமல் பாய்ஸ் (Shibin Melvin and Abhishek Nair, Manjummel Boys)
சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: ஃபசல் ஏ பாக்கர் மற்றும் ஷிஜின் மெல்வின், மஞ்ஞுமல் பாய்ஸ் (Fasal A Bhakkar, Shijin Melvin, Manjummel Boys)
சிறந்த Sync Sound: அஜயன் அடட், பனி (Ajayan Adat, Pani)
சிறந்த பெண் / திருநர் சமுகத்துக்கான விருது (நடுவர் குழு தேர்வு): பாயல் கபாடியா, ஆல் வி இமாஜின்ட் அஸ் லைட் (Payal Kapadia, All We Imagine As Light)
சிறந்த VFX: ஜிதின் லால், ஆல்ஃப்ரெட் டாமி, அனிருத்தா முகெர்ஜி, சலிம் லாஹிர், ஏஆர்எம் (Jithin Lal, Alfred Tomy, Anirudha Mukherjee, Salim Lahir, ARM)
சிறந்த நடன இயக்குநர்: சுமேஷ் சுந்தர் மற்றும் ஜிஷ்ணுதாச எம் வி, போகின்வில்லா (Sumesh Sunder and Jishnudas M V, Bougainvillea)
சிறந்த பின்னணி குரல் (பெண்): சாயனோரா பிலிப், பாரோஸ் (Sayonara Philip, Barroz)
சிறந்த பின்னணி குரல் (ஆண்): பாஷி வைக்கோம், பாரோஸ் (Bhasi Vaikom, Barroz)
சிறந்த ஆடை வடிவமைப்பு: சமீரா சனீஷ், ரேகசித்ரம் மற்றும் போகின்வில்லா (Sameera Saneesh, Rekhachithram and Bougainvillea)
சிறந்த ஒப்பனை கலைஞர்: ரோநெக்ஸ் சேவியர் போகின்வில்லா மற்றும் பிரமயுகம் (Ronex Xavier, Bougainvillea and Bramayugam)
சிறந்த கலரிஸ்ட்: Poetic Home of Cinema, Bougainvillea and Manjummel Boys
சிறந்த கலை இயக்குநர்: அஜயன் சலிஷெரி, மஞ்ஞுமல் பாய்ஸ் (Ajayan Chalissery, Manjummel Boys)
சிறந்த பின்னணி பாடகி (பெண்): ஸேபா டாமி, ஆரோரும் - அம் மா (Zeba Tommy for “Aarorum” in Am Ah)
சிறந்த பின்னணி பாடகர் (ஆண்): கே எஸ் ஹரிசங்கர், கிளியே - ஏஆர்எம் (KS Harisankar for “Kiliye” in ARM)
சிறந்த எடிட்டிங்: சூரஜ் ஈஎஸ், கிஷ்கிந்தா காண்டம் (Sooraj ES, Kishkindha Kaandam)
சிறந்த பின்னணி இசை: கிறிஸ்டோ சேவியர், பிரமயுகம் (Christo Xavier, Bramayugam)
சிறந்த இசையமைப்பாளர்: சுஷின் ஷ்யாம், போகின்வில்லா (Sushin Shyam, Bougainvillea)
சிறந்த பாடல் வரிகள்: வேடன், குதந்த்ரம் - மஞ்ஞுமல் பாய்ஸ் (Vedan for “Kuthanthram” from Manjummal Boys)
சிறந்த திரைக்கதை தழுவல்: லாஜோ ஜோஷ் மற்றும் அமல் நீரத், போகின்வில்லா (Lajo Jose and Amal Neerad, Bougainvillea)
சிறந்த திரைக்கதை: சிதம்பரம் எஸ் பொடுவல், மஞ்ஞுமல் பாய்ஸ் (Chidambaram S Poduval, Manjummel Boys)
சிறந்த ஒளிப்பதிவு: சைஜூ காலித், மஞ்ஞுமல் பாய்ஸ் (Shyju Khalid, Manjummel Boys)
சிறந்த கதை: பிரசன்னா விதானகே, பாரடைஸ் (Prasanna Vithanage, Paradise)
சிறந்த குணச்சித்திர கலைஞர் (பெண்): லிஜோமோல் ஜோஷ், நாடன்ன சம்பவம் (Lijomol Jose, Nadanna Sambhavam)
சிறந்த குணச்சித்திர கலைஞர் (ஆண்): சௌபின் சாஹிர், மஞ்ஞுமல் பாய்ஸ் மற்றும் சித்தார்த் பரதன், பிரமயுகம் (Soubin Shahir, Manjummel Boys and Sidharth Bharathan, Bramayugam)

