கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
தமிழ் திரையுலகின் எழுத்துத்துறையில் கவிஞர் வைரமுத்துவிற்கு என்று மிகப்பெரிய இடம் இருக்கிறது. 7 முறை தேசிய விருதுகளை வென்று, பாடலாசிரியராக அதிகமுறை வென்றவராக சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து தமிழ் எழுத்துத்துறையில் பயணித்துவரும் கவிஞர் வைரமுத்துவின் தாயார், இன்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்திருப்பதாக குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்..
தாயாரின் இறப்பு செய்தியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் கவிஞர் வைரமுத்து, “என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் வைரமுத்துவின் தயார் இறப்பு செய்தியறிந்த முதல்வர் முக ஸ்டாலின், “தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கலை தெரிவித்துள்ளார்.