\
விஜய், அஜித் பாடல்களுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார்

விஜய், அஜித் பாடல்களுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார்

விஜய், அஜித் பாடல்களுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார்
Published on

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த 1996-ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்' படம் சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக, அப்படத்தில் இடம்பெற்ற நட்பை போற்றும் ‘முஸ்தபா... முஸ்தபா’ பாடல், கல்லூரி கால இளைமைத் துடிப்பை கொண்டாடும் ‘கல்லூரி சாலை’பாடல்களுக்கு நடனம் அமைத்து நடன இயக்குநராக அறிமுகமானார் கூல் ஜெயந்த். வாலி படத்தில் ‘ஏப்ரல் மாதத்தில்’, விஜய்யின் ’குஷி’ படத்தில் ’மொட்டு ஒன்று’, ‘ப்ரியமானவளே’ படத்தில் ‘வெல்கம் பாய்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கு தமிழ் மட்டுமல்லாமல் மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் படங்களுக்கும் மலையாளத்திலும் நடனம் அமைத்துள்ளார்.

இந்த நிலையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடன இயக்குநர் கூல் ஜெயந்த் இன்று உடல்நலக்குறைவால் மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com