கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள்!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள்!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள்!
Published on

நாடு  முழுவதும் 60 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டு விழிப்புணர்வூட்டி வருகின்றனர்.

பிரதமர் மோடி,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,துணை ஜனாதிபதி வேங்கையா நாயுடு அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய் சங்கர் என பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகத்திலும் நடிகர் கமல்ஹாசன் தடுப்பூசிப் போட்டு விழிப்புணர்வூட்டினார். அவரைத் தொடந்து நடிகையும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த நடிகை ஸ்ரீப்ரியாவும் கொரோனா தடுப்பூசி போட்டு முன்மாதிரியாக திகழ்கிறார்.

அவரைத் தொடர்ந்து தமிழகத்தில் பல சினிமா பிரபலங்கள் முன்னெச்சரிகை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர்.

நடிகை ராதிகா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

அவரைப்போலவே, நடிகை வரலட்சுமியின் அம்மாவுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து நடிகர் பொன்வண்ணனும் அவரது மனைவி நடிகை சரண்யா பொன்வண்ணனும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com