டாப்பில் நயன்தாரா: தமிழ் நடிகைகளின் லேட்டஸ்ட் சம்பள விவரம்!

டாப்பில் நயன்தாரா: தமிழ் நடிகைகளின் லேட்டஸ்ட் சம்பள விவரம்!
டாப்பில் நயன்தாரா: தமிழ் நடிகைகளின் லேட்டஸ்ட் சம்பள விவரம்!

சினிமா, ஹீரோக்களின் உலகம். இங்கு நடிகைகளுக்கான சம்பளம் ஹீரோக்களை விட பல மடங்கு குறைவு. இதற்கு தயாரிப்பு தரப்பில் சொல்லும் காரணம், ‘படம் ஹீரோக்களை வச்சுதானே ஓடுது’ என்பது. இப்போது அந்த நிலை கொஞ்சம் மாறி வருகிறது. ஹீரோ அளவுக்கு இல்லையென்றாலும் ஏதோ கொஞ்சம் ‘போட்டு’க்கொடுக்க, முன் வந்திருக்கிறது தமிழ் சினிமா. 


இப்படிப்பட்டச் சூழலில் நடிகைகள் வாங்கும் லேட்டஸ்ட் சம்பள விவரத்தை (ரொம்ப முக்கியம்!) விசாரித்தோம். 

அதிக சம்பளத்துக்கு, இரண்டரை வருடத்துக்கு முன் பிள்ளையார் சுழி போட்டவர், நயன்தாரா. கடந்த சில வருடங்களில் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட்டாக, சம்பளத்தை உயர்த்தினார். இரண்டரை கோடி வேண்டுமென்று அவர் கேட்க, மறுக்கவில்லை தயாரிப்பு தரப்பில். தெலுங்கு, மலையாளத்திலும் அவருக்கு மார்க்கெட் இருப்பதால் இந்தச் சம்பளத்தைக் கொடுக்க முன் வந்தார்கள். அவரது இந்தச் சம்பள உயர்வு, இப்போது ஐந்து கோடியில் வந்து நிற்கிறதாம்! அஜீத்தின் ’விசுவாசம்’ படத்துக்கு நயன்தாரா சம்பளம் ரூ. 5 கோடி என்கிறது சாலிக்கிராமம். ‘வேலைக்காரன்’ படத்துக்கே அவருக்கு அவ்வளவு கோடி கொடுக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். 

இவரை அடுத்து தமன்னா, ரூ. 2 கோடி கேட்கிறார். தயாரிப்பு மற்றும் இயக்குனர்களை பொறுத்து சம்பளத்தை குறைத்தோ, அதிகரித்தோ கொள்வாராம். காஜல் அகர்வால் சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய். தமிழ், தெலுங்கு என்றால் இதில் கொஞ்சம் கூடும். 
சமந்தாவின் சம்பளம், ரூ.1.45 கோடி. த்ரிஷா, ஒன்றே கால் கோடியில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் கேட்கிறார்.

கீர்த்தி சுரேஷ் ஒரு கோடி கேட்கிறார். ’இப்பதான் நடிக்க வந்திருக்காங்க. அதுக்குள்ள ஒரு கோடி ரூபாயா?’ என்கிறார்களாம் தயாரிப்பு தரப்பில். ஆனால்,’பெரும்பாலான ஹீரோக்களின் சாய்ஸ் இவர் என்பதால், கேட்டதை கொடுத்து விடுகிறார்கள்’ என்கிறார்கள். 

கோடிகளில் சம்பளம் வாங்கும் இந்த நடிகைகளின் லிஸ்டில் லேட்டஸ்டாக, சேர்ந்திருக்கிறார் அமலா பால். இவரது சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய்!

ஆமா, ஒரு கோடிக்கு எத்தனை சைபர்ஜி!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com