மாலத்தீவை நோக்கி படையெடுக்கும் தமிழ் நடிகைகள்... வைரல் புகைப்படங்கள்!

மாலத்தீவை நோக்கி படையெடுக்கும் தமிழ் நடிகைகள்... வைரல் புகைப்படங்கள்!

மாலத்தீவை நோக்கி படையெடுக்கும் தமிழ் நடிகைகள்... வைரல் புகைப்படங்கள்!

சுற்றுலாவாசிகளின் ’பற்று’லாவான மாலத்தீவில் நடிகை காஜல் அகர்வாலைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங், சமந்தா, சோனாக்‌ஷி சின்ஹா, பிரணிதா என தமிழ் நடிகைகள் தொடர்ச்சியாக முகாமிட்டுள்ள புகைப்படங்கள் மனதை கொள்ளையடிக்கின்றன.

 ஆசியாவிலேயே மிகச்சிறிய நாடு, குறைந்த பரப்பளவு, குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு, பூமியில் மிகத்தாழ்வான பகுதியில் இருக்கும் நாடு போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது மாலத்தீவு.

மலைகளே இல்லாமல் கடலால் சூழப்பட்டு பளிச்சென்று பளபளக்கும் இத்தீவின் அழகில் மயங்காதவர்களே இல்லை எனலாம். உலக வரைப்படத்தில் இந்தியாவின் அருகிலேயே அமைந்து இந்தியாவிற்கும் அழகூட்டும் தீவு.

நடுத்தரவர்கத்தினரும் ஏழைகளும் பணம் சேர்த்தாவது வாழ்நாளில் ஒருமுறையாவது சென்றுவிடத்துடிக்கும் கண்களுக்குத் திகட்டாத தீவு. கரையில் இருந்துகொண்டே பெரிய பெரிய சுறா மீன்களும், ஆமைகளும், கடல்வாழ் உயிரினங்களும் நீந்தும் அழகை கண்டுகளிக்க பூமியின் ஒட்டுமொத்தக் கண்கள் பத்தாமல் வேற்றுலகவாசிகளின் கண்களும் போதாது என்று சொல்லவைக்கும் தீவு.

அப்படியொரு அழகுக் குவியலின் உருவமாய் இருக்கும் மாலத்தீவை நோக்கி தமிழ் நடிகைகள் படையெடுத்து வருகின்றனர். அழகான மாலத்தீவின் அழகோடு நடிகைகளின் பேரழகு புகைப்படங்கள்  நம்மை மலைக்க வைக்கின்றன.

சமீபத்தில்தான், நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் தேனிலவை மாலத்தீவில் கொண்டாடினார்.

அவரைத்தொடர்ந்து, நடிகை டாப்சி தோழிகளுடன் மாலத்தீவுச் சென்று குதூகலித்த புகைப்படங்கள் வைரல் ஆகின.

தமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமான டாப்சி வந்தன் வென்றான், ஆரம்பம், காஞ்சனா உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்ட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். 

நடிகை ரகுல் ப்ரித்சிங் தனது பெற்றோரின் திருமணநாளை கூலாக  கொண்டாய புகைப்படங்கள் நெகிழ்ச்சியூட்டின.

தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ள ரகுல் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

அவரைத்தொடர்ந்து, நடிகை பிரணிதா மாலத்தீவில் ஸ்கூபா டைவிங் செய்ததோடு கடல் சாகச விளையாட்கள் செய்யும் வீடியோவையும் பிரமாதப்படுத்தினார்.

கார்த்தி ஜோடியாக சகுனி, சூர்யா ஜோடியாக மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட தமிழ் படங்களில் பிரணிதா நடித்துள்ளார்.

தற்போது கன்னடப் படங்களிலும் தெலுங்குப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

பாலிவுட் நடிகையான சோனாக்‌ஷி சின்ஹாவும் மாலத்தீவில் ரிலாக்ஸால்க ஓய்வெடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து மாலத்தீவோடு சேர்த்து கண்களுக்கு புத்துணர்ச்சியூட்டினார்.

இவர், ரஜினிக்கு ஜோடியாக ’லிங்கா’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது திருமணநாளை கணவர் நாக சைதன்யாவுடன் தற்போது மாலத்தீவில் கொண்டாடி வரும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com