வெப் சீரிஸில் நடிக்கிறாரா சூர்யா?

வெப் சீரிஸில் நடிக்கிறாரா சூர்யா?

வெப் சீரிஸில் நடிக்கிறாரா சூர்யா?
Published on

தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகரான சூர்யா வெப் சீரிஸில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் மணிரத்னம் தயாரிக்க உள்ள இந்த வெப் சீரிஸ் தொடருக்கு ‘நவரசா’ என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

இந்த வெப்சீரிஸில் ஒன்பது விதமான நவரசங்களை ஒன்பது கதைகளாக வெவ்வேறு இயக்குநர்கள் இயக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகர்களும், இயக்குநர்களும் இதில் தங்கள் பங்களிப்பை கொடுக்க சம்மதித்து உள்ளார்களாம். 

‘180’ படத்தை இயக்கிய ஜெயேந்திர பஞ்சாபகேசன் சூர்யா நடிக்க உள்ள வெப் சீரிஸை இயக்க உள்ளாராம். அது தவிர மணிரத்னம், கே.வி.ஆனந்த், சுதா கொங்கரா, பிஜாய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன் மாதிரியான இயக்குநர்களோடு நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமியும் மீதமுள்ள எட்டு பாகங்களை தனித்தனியாக இயக்க உள்ளார்களாம். 

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாரை இதில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அமேசான் மாதிரியான ஓ.டி.டி தளத்தில் இதை வெளியிட உள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com