'குயின்' ரீமேக் படத்தை தமிழ், கன்னட மொழிகளில் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தமிழ்ப் படத்தில் காஜல் அகர்வாலும், கன்னடப் படத்தில் பருல் யாதவும் நடிக்க உள்ளனர். இதன் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடிக்க இருக்கிறார்.
விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் மார்ச் 2014-ல் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.
கல்யாணத்திற்கு பிறகு ஹனிமூனுக்காக பாரீஸ் போக விரும்புகிறார் கங்கணா. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில்,மாப்பிள்ளை மணம் செய்ய விருப்பமில்லை சொல்ல திருமணம் நின்றுவிடுகிறது. திருமணம் நடைபெறாவிட்டாலும் தேனிலவு செல்கிறேன் என கூறி கங்கணா தனியாக பாரீஸ் போகிறார். இது அவருக்கு புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. புதிய மனுஷியாக வீடு திரும்புகிறார். மீண்டும் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை சம்மதிக்கும் போது கங்கணா மறுத்துவிடுகிறார். இதான் 'குயின்' கதையின் சுருக்கம். இதன் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார். இந்தப்படத்தை தெலுங்கில் நேஷனல் அவார்ட் இயக்குநர் நீலகண்டன் ரீமேக் செய்கிறார். அதில் தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்திற்கு ‘குயின் ஒன்ஸ் அகெய்ன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக தமன்னா பாரம்பரிய முறையிலான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். "சுற்றுச்சூல் கெடுதி இல்லாத கடற்கரை ஓரங்களில் சில பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். என் ஃபீலிங் மிக நன்றாக உள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த வாரத்தில் மூன்று முறை பயிற்சி எடுத்தேன். அதைபோல ஃப்ரான்சில் ஒரு வாரம் ஆறுமுறை பயிற்சி எடுத்து கொண்டேன்” என அவர் கூறியுள்ளார்.