சினிமா
செல்ல நாய்க்குட்டிக்காக சைவத்துக்கு மாறிய தமன்னா!
செல்ல நாய்க்குட்டிக்காக சைவத்துக்கு மாறிய தமன்னா!
தனது வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிக்காக அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறிவிட்டதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி நடிகை தமன்னா கூறும்போது, ‘நான் அசைவ பிரியையாக இருந்தேன். எப்போதும் மீன் மற்றும் இறைச்சிகளை சாப்பிடுவது வழக்கம். எனது வீட்டில் பெப்பிள் என்ற செல்ல நாய் இருக்கிறது. கடந்த மாதம் அதற்கு உடல் நலமில்லாமல் போனது. அது எங்கள் செல்ல வளர்ப்புப் பிராணி மட்டுமல்ல, எங்கள் குடும்பத்து உறுப்பினர்.
அதன் மீது எனக்கு பாசம் அதிகம். உடல்நலமில்லாமல் அதை பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது. என் நேசத்துக்குரிய ஒன்றுக்காக எதையாவது விட்டுவிடலாம் என நினைத்தேன். சிறு தியாகம் செய்ய தீர்மானித்தேன். அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். இது சவாலானதுதான்’ என்று தெரிவித்துள்ளார்.