ஈஷா யோகா அமைப்பு நடத்திய மகா சிவராத்திரியில் நடிகை தமன்னா கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ளது ஈஷா யோகா மையம். அந்த அமைப்பு சார்பில் வருடா வருடம் மகா சிவராத்திரி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் நடந்த விழாவில் நடிகை தமன்னா கலந்து கொண்டு வழிபாடு செய்தார். மேலும் இது குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்துள்ளார். அதில், “இந்த சிவராத்திரியை என்னால் மறக்க முடியாது. நேற்றைய தினம் ஒரு மேஜிக்கல் எக்ஸ்பிரியன் கிடைத்தது. இங்குள்ளவர்கள் மிக அமைதியைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் அதிகம் வாய்த்திறந்து பேசுவதில்லை. அமைதியே உருவான இடமாக இது உள்ளது” என்று தமன்னா குறிப்பிட்டுள்ளார்.
நடிகை தமன்னா மிகத் தீவிரமான சிவபக்தை. அவர் திருவண்ணாமலை போன்ற பல சிவ ஸ்தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபாடுகள் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.