ஸ்ருதிக்கு கல்தா... ’சங்கமித்ரா’ படத்தில் அனுஷ்கா..!
சங்கமித்ரா படத்தில் ஸ்ருதி விலகிய நிலையில், அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாகுபலி ஜுரத்தால் வரலாற்றுப்படங்களை எடுக்க திட்டமிட்டு களத்தில் குதித்திருக்கிறார்கள் பலரும். சுந்தர்.சி இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸும் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ’சங்கமித்ரா’ படத்தை இயக்கத் திட்டமிட்டு கான்ஸ் படவிழாவில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இதற்காக இப்படத்தில் நாயகியாக களமிறங்கும் ஸ்ருதிஹாசன் வெளிநாடு சென்று வாள் பயிற்சி, சிம்பம்பம், குதிரையேற்றம் என பலமாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டதாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். அவர் விலகிக் கொண்ட நிலையில், சங்கமித்ரா படத்தில் நாயகியாக நடிக்கப்போவது யார் என மில்லியன் டாலர் கேள்வி எழுந்து வந்தது. இந்தப்பட்ரம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதால் அதற்கேற்ற மார்கெட் உள்ள நடிகைகள் சிலரிடம் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வந்தது தயாரிப்பு நிறுவனம். அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி போன்ற வரலாற்றுப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் ராணியாகவே வலம் வரும் வேளையில் அவரை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஒப்புக்கொள்ளாத நிலையில் தீபிகா படுகோனை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்ட்டு வருவதாக கூறப்படுகிறது.