மணாலியில் ’தலைவி’ பட பாடல் ஷூட்டிங்: நடனப் பயிற்சியில் கங்கனா ரனாவத்!

மணாலியில் ’தலைவி’ பட பாடல் ஷூட்டிங்: நடனப் பயிற்சியில் கங்கனா ரனாவத்!
மணாலியில் ’தலைவி’ பட பாடல் ஷூட்டிங்: நடனப் பயிற்சியில் கங்கனா ரனாவத்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’தலைவி’ படத்தின் பாடல் காட்சி ஷூட்டிங்கிற்காக மணாலியில் கங்கனா ரனாவத் நடனப் பயிற்சியில் இன்று கலந்துகொண்டார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க பலர் போட்டிப்போட்டு வந்த நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் வெப் சீரிஸாக இயக்கியிருந்தார். ஆனால், ஏ.எல் விஜய் கடந்த ஆண்டு கங்கனா ரனாவத்தை வைத்து ‘தலைவி’ படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பித்தார். படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனாவால் ஷூட்டிங் தள்ளிப்போனது.

இந்நிலையில், தலைவி படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. தற்போது பாடல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதால், நடனக் காட்சிகளில் கலந்து கொள்வதற்காக கங்கனா ரனாவத் மும்பையிலிருந்து ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் குளு குளு மணாலிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

 அங்குதான், தற்போது தலைவி பாடல்களுக்காக நடனப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு பயிற்சியளிப்பவர் உதவி நடன இயக்குநர் பிரசன்னா பாபு. ஆனால், பாடலுக்கு நடனம் அமைப்பவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா மாஸ்டர்.

இவரிடம்தான் பிரசன்னா பாபு உதவி நடன இயக்குநராக பணிபுரிகிறார். இத்தகவலை, தனது பேஸ்புக் பக்கத்தில் பிரசன்னா பாபு மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் தொடர்ச்சியாக அரசியல்வாதிகளையும் திரைத்துறையினரையும் விமர்சித்து கங்கனா ரனாவத் பாலிவுட்டில் புயலைக் கிளப்பி வருகிறார். அதோடு, அரசியல் படமான தலைவி படத்திலும் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார் என்பதால் , இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்படத்தில், நடிகர் அரவிந்த் சுவாமி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com