\
அரசியல் நையாண்டியை இயக்குகிறார் டி.ஆர்!

அரசியல் நையாண்டியை இயக்குகிறார் டி.ஆர்!

அரசியல் நையாண்டியை இயக்குகிறார் டி.ஆர்!
Published on: 

இப்போதைய அரசியல் நிலவரத்தை வைத்து நையாண்டி படத்தை இயக்க இருக்கிறார் விஜய டி.ராஜேந்தர்!

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செல்லப்பிள்ளையாக இருக்கும் டி.ஆர், ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். அவர் இயக்கிய ஒரு தலைராகம், ரயில் பயணங்களில், தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா, மைதிலி என் காதலி உட்பட பல படங்கள் சூப்பர் ஹிட்டானவை. அதே போல அவர் இசையில் உருவான பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பரபரப்பாகச் சென்று சேர்ந்தவை. இன்றும் அந்தப் பாடல்கள் ரசிகர்களை கட்டிப்போடுகின்றன. 

’வீராசாமி’க்குப் பிறகு படம் இயக்குவதை நிறுத்தியிருந்த டி.ஆர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கிய ’கவண்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் படம் இயக்கப்போகிறார், டிஆர். 

இப்போது அவர் கையில் எடுத்திருப்பது, அரசியல் நையாண்டியை. இதில் காமெடி நடிகர்கள் பலர் நடிக்க இருக்கின்றனர். அவர்களுடன் முக்கிய வேடத்தில் நமீதா நடிக்க இருக்கிறார். டி.ஆரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com