சினிமா
வராத படத்திற்கு விமர்சனமா?: ரஜினி பற்றி டி.ராஜேந்தர்
வராத படத்திற்கு விமர்சனமா?: ரஜினி பற்றி டி.ராஜேந்தர்
ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி கேட்பது, திரைக்கு வராத படத்திற்கு விமர்சனம் கேட்பதை போன்றது என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ’ஒரு படம் வெளியில் வந்தால் தான் விமர்சனம் செய்ய முடியும். வெளியில் வராத படத்திற்கு எப்படி விமர்சனம் செய்ய முடியும்? முதலில் கல்யாணம். அப்புறம் சாந்தி கல்யாணம். அப்புறம் தான் பிள்ளை பிறக்கும். பிறக்காத பிள்ளைக்கு கருப்பா சிவப்பா என்று எப்படி பெயர் வைக்க முடியும்?’ என்றார். பால், அரிசியில் கலப்படம் என வரும் புகார்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.