ரூ.530 கோடிக்கு ஒப்பந்தமாகும் சிட்னி ஸ்வீனி..
ரூ.530 கோடிக்கு ஒப்பந்தமாகும் சிட்னி ஸ்வீனி..web

இந்தியப் படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகைக்கு ரூ.530 கோடி சம்பளம்!

இந்திய படம் ஒன்றில் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ.530 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வீனி, பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக ₹530 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகவுள்ள படம் என்று கூறப்படுகிறது.

ரூ.530 கோடிக்கு ஒப்பந்தமாகும் சிட்னி ஸ்வீனி..

'தி சன்' (The Sun) பத்திரிக்கை வெளியிட்ட தகவலின்படி, ஒரு இந்திய தயாரிப்பு நிறுவனம் சிட்னி ஸ்வீனிக்கு ₹530 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் ₹415 கோடி நடிப்புக்கான ஊதியமாகவும், ₹115 கோடி விளம்பர ஒப்பந்தங்களுக்காகவும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தில், சிட்னி ஸ்வீனி ஒரு இளம் அமெரிக்க நட்சத்திரமாக நடிக்கவுள்ளதாகவும், அவர் ஒரு இந்திய நட்சத்திரத்துடன் காதலில் விழுவதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரூ.530 கோடிக்கு ஒப்பந்தமாகும் சிட்னி ஸ்வீனி..
ரூ.530 கோடிக்கு ஒப்பந்தமாகும் சிட்னி ஸ்வீனி..

தயாரிப்பாளர்கள், சிட்னியின் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தைப் பயன்படுத்தி, இந்தப் படத்தைப் பெரிய அளவில் சர்வதேச சந்தையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பாரிஸ், லண்டன் மற்றும் துபாய் போன்ற சர்வதேச நகரங்களில் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த பிரம்மாண்டமான தொகையைக் கேட்டு சிட்னி ஸ்வீனி அதிர்ச்சியடைந்ததாகவும், எனினும் இந்தப் படத்தின் கதைக்களம் அவரை ஈர்த்துள்ளதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.530 கோடிக்கு ஒப்பந்தமாகும் சிட்னி ஸ்வீனி..
ரூ.530 கோடிக்கு ஒப்பந்தமாகும் சிட்னி ஸ்வீனி..

இந்தப் பெரிய வாய்ப்பு அவரது உலகளாவிய புகழை மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செய்தி குறித்து சிட்னி ஸ்வீனி தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com