நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை!

நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை!

நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை!
Published on

சுவிட்சர்லாந்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல தமிழ் நடிகை ஸ்ரீதேவி, இந்திக்கு சென்று அங்கு புகழின் உச்சிக்கு சென்றார். பிறகு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண் டு அங்கேயே செட்டில் ஆனார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதே

வி சென்றார். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் அவருக்கு சிலை வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 

(கணவர் போனி கபூருடன் சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவி)

ஸ்ரீதேவி நடித்து 1989-ல் வெளியான இந்தி படம், ’சாந்தினி’. சுவிட்சர்லாந்தை மையப்படுத்தி இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது. பாடல் காட்சிக  ளும் பெரும்பாலான வசன காட்சிகளும் அந்நாட்டின் சுற்றுலா தளங்களில் படமாக்கப்பட்டிருந்தன. நாட்டின் சுற்றுலாவுக்கு இந்தப் படம் உதவி யதால் அதிகமான எண்ணிக்கையில் இந்தியர்கள் அங்கு வருகிறார்களாம். இதையடுத்து அவருக்கு அங்கு சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டுள் ளது.

ராஜ்கபூர் நடித்து 1964-ல் வெளியான ’சங்கம்’-தான் முதன் முதலில் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்ட இந்திய படம். பின்னர் ‘அன் ஈவினிங் இன் பாரிஸ்’ என்ற இந்தி படம் 1967 ல் வெளியானது. பிறகு இந்திய படங்கள் அதிகமாக இங்கு படமாக்கப்பட்டன. பிரபல இந்திப் பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா தனது அனைத்துப் படத்தையுமே இங்கு படமாக்குவதை நிரந்தரமாக வைத்திருந்தார். 

இதையடுத்து கடந்த வருடம் அவருக்கு சுவிட்சர்லாந்தின் மையப்பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான இன்டர்லகேனில் ( Interlaken) 2016-ம் ஆண்டு சிலை நிறுவப்பட்டது. அவர் பெயரில் ரயில் ஒன்றும் அங்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த ஸ்ரீதேவியை கவுரவிக்கும் விதமாக அங்கு சிலை நிறுவப்பட இருக்கிறது.

‘இப்போது அதிகமான இந்திய சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். அதற்கு சினிமாதான் காரணம. யாஷ் சோப்ராவின் ’தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே’ படம் சுவிட்சர்லாந்தை அதிகமாக அடையாளப்படுத்தி உள்ளது. பாலிவுட் டூர் பேக்கேஜூக்கும் இங்கு வாய்ப்புள்ளது. யாஷ் சோப்ரா அதிகமாக தனது படங்களில் பயன்படுத்தும் இங்குள்ள இரண்டு ஏரிகளுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது’ என்று இன்டர்லகேன் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com