ட்விட்டரில் 4 மில்லியன் ரசிகர்களை எட்டிய சுஷ்மிதா சென்

ட்விட்டரில் 4 மில்லியன் ரசிகர்களை எட்டிய சுஷ்மிதா சென்

ட்விட்டரில் 4 மில்லியன் ரசிகர்களை எட்டிய சுஷ்மிதா சென்
Published on

ட்விட்டரில் 4 மில்லியன் பேர் தன்னை பின் தொடர்வதற்காக முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென். ஹைதராபாத்தில் பிறந்த இவர் புது தில்லியில் வளர்ந்தார். இவரது தந்தை ஷூபீர் சென் ஒரு விமானப்படை கமாண்டர். தாய் சுப்ரா சென் ஒரு ஃபேஷன் டிசைனர். இவருக்கு ராஜீவ் சென் என்ற சகோதரரும் நீலம் சென் என்ற சகோதரியும் உள்ளனர். 1994 ஆம் ஆண்டு இவர் உலக அழகியாக தேர்வான பிறகு பாலிவுட் பக்கம் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. தஸ்தக் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்த இவர், இன்று வரை பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்சமயம் சுஷ்மிதாவை ட்விட்டர் பக்கத்தில் 4 மில்லியன் பேர் பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். டிஜிட்டல் மீடியா உலகில் ட்விட்டர் மிக முக்கியமான ஊடகம். அதில் இவ்வளவு பெரிய தொகையை எட்டி இருப்பது அவரது புகழை மேலும் உயர்த்தியுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மிதா ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். ட்விட்டரில் 4 மில்லியன் தொகையை எட்டி இருப்பதை கொண்டாடுகிறேன். உங்களது உலகத்துடன் ஒரு பகுதியாக என்னை ஏற்றுக் கொண்டதற்காக நன்றி” என்று அவர் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com