“மீடூ இயக்கத்தையே லீனா கறைபடிய வைத்துவிட்டார்”- சுசி கணேசன் மனைவி புகார்

“மீடூ இயக்கத்தையே லீனா கறைபடிய வைத்துவிட்டார்”- சுசி கணேசன் மனைவி புகார்

“மீடூ இயக்கத்தையே லீனா கறைபடிய வைத்துவிட்டார்”- சுசி கணேசன் மனைவி புகார்

சுசி கணேசனுக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த லீனா மணிமேகலை பொய் சொல்வதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டரில் மீடூ இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பேசு பொருளாக மாறி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கவிஞர் லீனா மணிமேகலை, பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனையடுத்து கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் அளித்தார். மேலும் தன் மீது பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், சுசி கணேசன் ஒரு ரூபாய் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கும் விளைவிக்கும் வகையில் லீனா மணிமேகலை புகார் கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தனது கணவருக்கு எதிராக லீனா மணிமேகலை பொய் கூறுவதாக சுசி கணேசனின் மனைவி மஞ்சரி கூறியுள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு பாதிக்கப்பட்ட நபரின் மனைவியாக நானும் லீனா மணிமேகலையின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான வீடியோவை பார்த்தேன். சின்மயி விவகாரத்தை எடுத்துக்கொண்டால் அவர் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். ஆனால் லீனா மணிமேகலை அப்படி செய்யவில்லையே..?  என்னாச்சு.. உண்மையில் பாதிக்கப்பட்ட நபராக இருந்தால் செய்தியாளர்கள் முன்னால் உண்மையை வெளிப்படுத்தலாமே. செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் முறைப்படி பதிலளிக்கலாமே.  இது ஒரு வாய்ப்புத்தானே. இதைவிட்டுவிட்டு அவர் கோபப்படுகிறார். தன்னுடைய பெண் அடையாளத்தை பயன்படுத்தி அவர் உண்மையை மறைக்கிறார்.

லீனா மணிமேகலை தைரியமாக தான் ஒரு இருபால் உணர்வு கொண்டவர் என தெரிவிக்கும்போது, எந்தவொரு கேள்விகளுக்கும் தைரியமாக பதில் சொல்லலாம் இல்லையா? சுசி கணேசனின் நேர்காணல் முடிந்ததும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அவர் கூறுகிறார். அப்படியானால் அந்த நேர்காணல் எங்கு நடந்தது.. எவ்வளவு நேரம் நடந்தது.. எந்தத் தேதி நடந்தது எனத் தெரிவிக்கலாமே? அவரின் பொய்யை நம்புகின்றவர்களாவது சிறிய உண்மையை வெளிப்படுத்துமாறு அவரிடம் கேளுங்கள். மீ டூ விவகாரத்தில் லீனா மணிமேகலை ஒரு கருப்பு ஆடு. அந்த இயக்கத்தையே கறைபடிய வைத்துவிட்டார். மணிமேகலைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தயவு செய்து சிந்தித்து பாருங்கள்.” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com