சினிமா
'வஞ்சம் தீர்த்தாயடா' பட நாயகர்கள் தேர்வுக்கு ரியாலிட்டி ஷோ நடத்தும் சுசி கணேசன்
'வஞ்சம் தீர்த்தாயடா' பட நாயகர்கள் தேர்வுக்கு ரியாலிட்டி ஷோ நடத்தும் சுசி கணேசன்
'வஞ்சம் தீர்த்தாயடா' திரைப்படத்திற்கு ரியாலிட்டி ஷோ மூலம் நாயகர்களை தேர்வு செய்ய உள்ளதாக இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.
விரும்புகிறேன், ஃபைவ் ஸ்டார், கந்தசாமி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சுசி கணேசன், முதல் முறையாக இளையராஜாவின் இசையில் 'வஞ்சம் தீர்த்தாயடா' திரைப்படத்தை இயக்குகிறார்.
இந்தப் படக்குழுவினருடன் அவர் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, புதுமுகங்களை 'வஞ்சம் தீர்த்தாயடா' படத்தில் நடிக்க வைக்க உள்ளதாகவும், நடிப்பில் ஆர்வமுள்ள 20 முதல் 40 வயது உள்ளவர்கள் தங்கள் வீடியோக்களை 4vmaxtv.com என்ற இணையதளத்தில் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டார்.