சுஷாந்த் சிங் வழக்கு: சுஷாந்த்தின் மேனேஜரும் ரியாவின் சகோதரரும் நீதிமன்றத்தில் ஆஜர்

சுஷாந்த் சிங் வழக்கு: சுஷாந்த்தின் மேனேஜரும் ரியாவின் சகோதரரும் நீதிமன்றத்தில் ஆஜர்

சுஷாந்த் சிங் வழக்கு: சுஷாந்த்தின் மேனேஜரும் ரியாவின் சகோதரரும் நீதிமன்றத்தில் ஆஜர்
Published on

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில், அவரது மேனேஜரும் காதலி ரியா சக்ரவர்த்தியின் சகோதரரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜுன் 14 ஆம் தேதி தனது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்திற்கு பாலிவுட்டில் நிலவிவரும் வாரிசு அரசியல் என்று காரணம் சொல்லப்பட்டாலும், மறுபுறம்  மன அழுத்தம் காரணமாகத்தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துண்டார். அதற்கான மாத்திரைகளும் உட்கொண்டார் என்ற பல்வேறு தகவல்கள் வெளியாகின.

        இந்நிலையில், அவரது தற்கொலைக்கு காதலி ரியா சக்ரவர்த்தி பிரிந்து சென்றதுதான் என்றும்,  ’சுஷாந்துக்கு தெரியாமலேயே தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கொடுத்துள்ளனர்’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ரியா மீது சுமத்தப்பட்டது

அதோடு,  ரியா சக்ரவர்த்தி, பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரும் நடிகை ஆலியா பாட்டின் தந்தையுமான மகேஷ்பாட்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக ரியா சக்ரவர்த்தியின் தம்பி செளவிக் சக்ரவர்த்தியும், சுஷாந்தின் மேனேஜர் சாமுவேல் மிராண்டாவையும் கைது செய்த போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் இருவரும் செப்டம்பர் 9 ஆம் தேதிவரை உள்ளூர் காவல் நிலையத்தில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com