போதைப் பொருள் விவகாரம் : நீண்ட விசாரணைக்கு பின் சுஷாந்த் சிங் காதலி ரியா கைது

போதைப் பொருள் விவகாரம் : நீண்ட விசாரணைக்கு பின் சுஷாந்த் சிங் காதலி ரியா கைது
போதைப் பொருள் விவகாரம் : நீண்ட விசாரணைக்கு பின் சுஷாந்த் சிங் காதலி ரியா கைது

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் போதைப் பொருள் தடுப்பு அமைப்பினர் மூன்றாவது நாளாக இன்று நடிகை ரியா சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில் போதைப்பொருட்களை வாங்கியது, வைத்திருந்தது மற்றும் விநியோகித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு சிபிஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்டோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

விசாரணையில் நடிகை ரியாவுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என செய்தியாளர்களிடம் ரியா தெரிவித்திருந்தார். ஆனால் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com