சினிமா
சுஷாந்த் சிங் மரணம்: வழக்கின் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது மும்பை போலீஸ்
சுஷாந்த் சிங் மரணம்: வழக்கின் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது மும்பை போலீஸ்
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைத்தது மும்பை போலீஸ். சிபிஐயின் சிறப்பு புலனாய்வு குழு மும்பை பந்த்ரா காவல்நிலையத்தில் அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பான சாட்சிகள், ஆவணங்கள் மற்றும் 56 பதிவுகள் ஆகியவற்றை காவல்துறை ஒப்படைத்துள்ளது. மேலும் தடயவியல் ஆவணங்கள், பிரேத பரிசோதனை அறிக்கை, சுஷாந்தின் மூன்று செல்போன்கள், லேப்டாப்கள் ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சுஷாந்தின் உடைகள், தற்கொலை செய்துகொண்டபோது பயன்படுத்திய துணிகள், மெத்தை, படுக்கை விரிப்புகள், ஜூஸ் குவளைகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.