\
நெஞ்சில் துணிவிருந்தால்... படத்தலைப்பை மாற்றிய சுசீந்திரன்!

நெஞ்சில் துணிவிருந்தால்... படத்தலைப்பை மாற்றிய சுசீந்திரன்!

நெஞ்சில் துணிவிருந்தால்... படத்தலைப்பை மாற்றிய சுசீந்திரன்!
Published on: 

சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் படத்திற்கு அறம் செய்து பழகு என வைக்கப்பட்டிருந்த தலைப்பை நெஞ்சில் துணிவிருந்தால் என மாற்றியிருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் சுசீந்திரன். 
மதுரை பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்று அறம் செய்து பழகு என்னும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறது. ஆகையால் அந்த தலைப்பை படத்திற்கு வைப்பதில் சிக்கல் எழுந்தது. அத்துடன் சமுதாயத்திற்கு கருத்துச் சொல்வதாக இருக்கிறது. சில விஷயங்களில் அந்தத் தலைப்பு படத்திற்கு பொறுத்தமானதாக இல்லை. ஆகையால் ’நெஞ்சில் துணிவிருந்தால்’ என மாற்றிவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் விக்ராந்த் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஆக்சன் த்ரில்லர் கலந்த இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருக்கிறார். அன்னை பிலிம்ஸ் பேக்டரி இப்படத்தை தயாரிக்க உள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com