நிவின் பாலி படப்பிடிப்பில் கேக் வெட்டிய ஜோதிகா-சூர்யா போட்டோ ஆல்பம்

நிவின் பாலி படப்பிடிப்பில் கேக் வெட்டிய ஜோதிகா-சூர்யா போட்டோ ஆல்பம்
நிவின் பாலி படப்பிடிப்பில் கேக் வெட்டிய ஜோதிகா-சூர்யா போட்டோ ஆல்பம்

சூர்யாவும் ஜோதிகாவும் நிவின் பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி தங்களின் அன்பை தெரிவித்துள்ளனர். 

ஜோதிகாவின் ‘36 வயதினிலே’ ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் வெளி வந்தது. மலையாளத்தில் வெளியன ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தை தழுவி தமிழில் இப்படம் தயாரானது. பெரிய அளவுக்கு வியபார ரீதியாக இந்தப் படம் வெற்றியடையவில்லை என்றாலும் ஜோதிகாவுக்கு நல்ல பெயரை ஈட்டி தந்தது. 
தற்சமயம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என்ற படத்தை ஆண்ட்ரூஸ் இயக்கி வருகிறார்.19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரின் நிஜக்கதை இது. வழிப்பறி செய்து வந்த ஒருவரின் வாழ்க்கையை இந்தக் கதை பேசுகிறது. 

இந்தப் படத்தில் நிவின் பாலி நடித்து வருகிறார். கர்நாடகத்தை சார்ந்த பிரியங்கா ஹீரோயினாக நடிக்கிறார். இவருக்கு இது முதல் மலையாளப் படம்.சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மங்களூரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு சூர்யா – ஜோதிகா இருவரும் சர்ப்ரைஸ் விசிட் அடித்தனர். அதைக் கொண்டாடும் விதத்தில் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com