\
''சூர்யாவை கேளுங்கள்'' - ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த என்ஜிகே படக்குழு!

''சூர்யாவை கேளுங்கள்'' - ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த என்ஜிகே படக்குழு!

''சூர்யாவை கேளுங்கள்'' - ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த என்ஜிகே படக்குழு!
Published on

நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் மே 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைபடம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்கும், சாய் பல்லவியும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் என்.ஜி.கே படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து படக்குழு படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. விளம்பரத்தின் ஒரு பகுதியாக ட்விட்டர் நிறுவனம் தற்போது என்.ஜி.கே படத்திற்கான பிரத்யேக எமோஜியை வெளியிட்டிருக்கிறது. 

மேலும் இன்று மாலை 5 மணிக்கு நடிகர் சூர்யா ட்விட்டர் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ரசிகர்கள் தங்களது கேள்விகளை #AskSurya என்ற ஹேஷ்டேக் மூலம் கேட்கலாம் என்றும் கேள்விகளுக்கு சூர்யா பதிலளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com