”வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன்” - ’ஜெய்பீம்’-ஐ பாராட்டிய முதல்வருக்கு சூர்யா நன்றி
''வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன்'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூர்யா மற்றும் படக்குழுவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 'மனம் கனக்கிறது' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த பதிவுக்கு ட்விட்டர் வாயிலாக நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்'' என்று தெரிவித்துள்ளார்.