நடிகர் சூர்யாவின் ‘சொடக்கு’ பாடல் யுடியூப்-ல் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா நடித்து வெளியாக இருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம் பெற்றுள்ள 'சொடக்கு' என்ற பாடலின் டீசர் கடந்த அக்டோபர் 16 அன்று வெளியானது.
இதற்கு அனிருத் இசைமைத்திருந்தார். இதன் முன்பே வெளியான "நானா தானா வீணா போன" என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளையொட்டி இரண்டாவது பாடலின் 'சொடக்கு’ டீஸரை நள்ளிரவில் வெளியிட்டிருந்தனர். இதில் இடம்பெற்றிருந்த ‘சொடக்கு மேல சொடக்கு போடுது.. என் விரலு வந்து’ பாடலுக்கான வரிகளை மணி அமுதவன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தனர். கிராமிய குரலில் கனீரென்று ஒலித்த அப்பாடல் பட்டித் தொட்டி முழுக்க கட்டி ஆண்டது. இந்தப் பாடலின் வரிகளை வைத்து பல ரீமேக் வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்தப் பாடலின் டீசர் யுடியூப்-ல்(youtube) ஒரு கோடி பார்வையாளர்களை தாண்டி விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும் தமிழ அளவில் ‘சொடக்கு’ பாடலை பற்றிய செய்திகள் ட்விட்டரில் இன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.