\
உறுதுணைக் கதாபாத்திரத்தில் சூர்யா: கொடைக்கானலில் படப்பிடிப்பு தீவிரம்!

உறுதுணைக் கதாபாத்திரத்தில் சூர்யா: கொடைக்கானலில் படப்பிடிப்பு தீவிரம்!

உறுதுணைக் கதாபாத்திரத்தில் சூர்யா: கொடைக்கானலில் படப்பிடிப்பு தீவிரம்!
Published on

இயக்குநர் பாண்டிராஜ் படத்தைத் தொடர்ந்து டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில், உறுதுணைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

'கூட்டத்தில் ஒருத்தன்' படத்தை இயக்கிய ஞானவேல் தற்போது சமூகக் கருத்தை முன்வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை தயாரிப்பதுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சூர்யா.

இதற்கான படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவின் 20 நிமிட காட்சிகள் மட்டுமே முதலில் திரைக்கதையில் எழுதப்பட்டிருந்தன. ஆனால், தற்போது சூர்யாவுக்காக 40 நிமிடக் காட்சிகள் இடம்பெறும் வகையில் மாற்றியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தப் படத்துக்கான படப்பிடிப்பில் சூர்யா தற்போது பங்கேற்றுள்ளார். இதற்காக, அவர் புதுக்கோட்டையில் இருந்து கொடைக்கானல் சென்றுள்ளார்.

இந்தப் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு, மீண்டும் இயக்குநர் பாண்டிராஜ் படத்தில் சூர்யா இணைவார் எனத் தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com