சுதா கொங்கரா மகள் திருமணத்தில் சூர்யா: வைரல் புகைப்படங்கள்!

சுதா கொங்கரா மகள் திருமணத்தில் சூர்யா: வைரல் புகைப்படங்கள்!
சுதா கொங்கரா மகள் திருமணத்தில் சூர்யா: வைரல் புகைப்படங்கள்!

இயக்குநர் சுதா கொங்கராவின் மகள் திருமணத்தில் சூர்யா கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஹார்ட்டின்களை குவித்துள்ளன.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுதா கொங்கரா கல்லூரி படிப்பை படித்ததெல்லாம் தமிழகத்தில்தான். சினிமா மீதான காதலால், இயக்குநர் மணிரத்னத்திடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுதா கொங்கரா, கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

ஆனால்,அவரை முன்னணி இயக்குநராக்கியது 2016 ஆம் ஆண்டு மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படம்தான். இப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது அடுத்தப் படமாக சூரரைப் போற்று படத்தை இயக்கி முடித்துள்ள, சுதா கொங்கரா இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார். காரணம், சூரரைப் போற்று, தீபாவளியொட்டி நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது. 

படம் வெளியாகும் சந்தோஷம் ஒருபுறம் என்றால், அவரது அன்பு மகளின் திருமணக் கொண்டாட்டம் மறுபுற சந்தோஷம். நேற்று நடந்து முடிந்த சுதா கொங்கரா மகளின் திருமணத்தில் நடிகர் சூர்யா கலந்துகொண்டுள்ளார். எப்போதும், மார்டர்ன் உடைகளிலேயே பார்த்த சுதா கொங்கரா புடவையில் ‘அட’ சொல்ல வைக்கிறார். இந்தப் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரல் ஆகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com