\
ஒரே படத்தில் இணையும் சூர்யா-கார்த்தி!

ஒரே படத்தில் இணையும் சூர்யா-கார்த்தி!

ஒரே படத்தில் இணையும் சூர்யா-கார்த்தி!
Published on: 

அண்ணன் சூர்யாவும் தம்பி கார்த்தியும் ஒரே படத்தில் இணைகிறார்கள்.
ஆம். சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் ’பசங்க’ பாண்டிராஜ் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் ஏற்கெனவே சூர்யா அமலா பால் நடித்த பசங்க -2 படத்தை தயாரித்து இருந்தது. தற்போது ரிலீசுக்கு தயாராகும் ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படத்தையும் அந்த நிறுவனமே தயாரித்து உள்ளது. இந்நிலையில், கார்த்தி நடிக்கும் இப்படத்தை பற்றிய அறிவிப்பை 2டி எண்டர்டெய்ன்மெண்ட்  நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் அறிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com