பழம்பெரும் ஹீரோயின் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, ’மகாநடி’என்ற பெயரில் சினிமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார்.
இதில் சாவித்ரியின் கணவர் ஜெமினி கணேசனாக நடிக்க சில ஹீரோக்களிடம் பேசி வந்தனர். பிறகு சூர்யா நடிப்பதாகத் தகவல் வெளியானது.
இதுபற்றி விசாரித்தபோது, ’அந்த கேரக்டரில் நடிக்க வைக்க சூர்யா பரிசீலனையில் இருந்தார் என்பது உண்மைதான். ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது வேறு நடிகரை தேடி வருகிறோம்’ என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.