\
வாளேந்தி நிற்கும் சூர்யா...!  ’சூர்யா 40’ படத்தின் புகைப்படம் வெளியீடு!

வாளேந்தி நிற்கும் சூர்யா...! ’சூர்யா 40’ படத்தின் புகைப்படம் வெளியீடு!

வாளேந்தி நிற்கும் சூர்யா...! ’சூர்யா 40’ படத்தின் புகைப்படம் வெளியீடு!
Published on

வாளேந்தி நிற்கும் சூர்யாவின் ‘சூர்யா 40’ படத்தின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

‘சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூர்யா முழுமையாக குணமடைந்த பின்னர், கடந்த மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் புகைபடத்தில் கையில் துப்பாக்கியுடன் சூர்யாவின் நிழல் இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், சூர்யா கையில் வாளுடன் நிற்கும் புகைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இரண்டிலும் சூர்யா தெரியவில்லை. அவரின் நிழல் மட்டுமே தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ’முதலில் துப்பாக்கி... அடுத்து வாள்... அடுத்து என்ன ஆயுதமாக இருக்குமோ என்றும்... ‘வாள் தூக்கி வந்து நின்னான் பாரு வந்து சண்டை போட எவனும் இல்ல’ என்று ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்கி கருத்திட்டு வருகிறார்கள்.

’சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com