சண்டே விருந்தாக சூர்யா 42 படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த படக்குழு.. ட்ரெண்டாகும் டைட்டில்!

சூர்யாவின் ஆகப்பெரும் எதிர்ப்பார்ப்புக்குட்பட்ட S42 படத்தின் டைட்டில் லுக்கும் போஸ்டரும் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருந்தாக அமைந்திருக்கிறது.
S42 | Siva, Suriya
S42 | Siva, SuriyaTwitter

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று வரும் சூர்யாவின் ஆகப்பெரும் எதிர்ப்பார்ப்புக்குட்பட்ட S42 படத்தின் டைட்டில் லுக்கும் போஸ்டரும் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருந்தாக அமைந்திருக்கிறது.

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் உட்பட 10 மொழிகளில் 3D தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கிறது சூர்யாவின் 42வது படம். படத்தின் ப்ரீ பிஸ்னஸே 500 கோடியை எட்டியதாக வெளியான தகவலே மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்திருந்தது.

suriya 42
suriya 42@StudioGreen2/twitter

இதுபோக, இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ள பாலிவுட்டின் திஷா பதானி அடிக்கடி தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு பல பண்பாட்டு கலைகளைகளையும் கற்று வரும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு படு வைரலாகி வந்தது.

படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எப்போது வரும் என மிகுந்த ஆவலோடு காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக மிக முக்கியமான அறிவிப்பாக படத்தின் டைட்டிலை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

அதன்படி கங்குவா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மதன் கார்கி வசனங்களும் பாடல்களும் எழுத, வெற்றி ஒளிப்பதிவு செய்ய 2024ம் ஆண்டு தொடக்கத்தில் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உட்பட 10 மொழிகளில் 3D தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விரைவில் சூர்யாவின் இந்த கங்குவா படத்தில் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்ற அப்டேட்களும் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம். டைட்டில் வெளியான நிலையில் ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் ஹாட் டாபிக்காக இருப்பது #Kanguva என்ற ஹேஷ்டேக்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com