இயக்குநர் பாண்டிராஜூடன் மீண்டும் இணையும் சூர்யா?

இயக்குநர் பாண்டிராஜூடன் மீண்டும் இணையும் சூர்யா?

இயக்குநர் பாண்டிராஜூடன் மீண்டும் இணையும் சூர்யா?
Published on

சுதா கொங்காரா இயக்கிய சூரரைப் போற்று ரீலிசுக்கு காத்திருக்கிறது. அடுத்து ஹரியுடன் அருவா, வெற்றிமாறனுடன் வாடிவாசல் படங்களில் இணைவதாக அறிவித்திருந்தார் சூர்யா. அருவா படத்தின் படப்படிப்புகள் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்தப் படத்தின் பணிகளும் தாமதமாகும் நிலையில், அதற்கு முன்னர் பாண்டிராஜ் படத்தில் சூர்யா நடிக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இந்தப் புதிய படம் பற்றிய அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியாகவில்லை. புதிய படங்களைத் தொடங்குவதற்கு முன் பாண்டிராஜ் படத்தை முடித்துவிடலாம் என சூர்யா நினைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு வெற்றிமாறனின் வாடிவாசலுக்கு வரலாம்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு விழா நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com