\
‘சூர்யாவும்.. சிட்டுக்குருவியும்’ - சூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு

‘சூர்யாவும்.. சிட்டுக்குருவியும்’ - சூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு

‘சூர்யாவும்.. சிட்டுக்குருவியும்’ - சூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு
Published on


‘இறுதிச்சுற்று’ படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படம், ’சூரரைப் போற்று’. சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். மற்றும் ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் தயாராவதாக கூறப்படுகிறது. வாழ்க்கை வரலாறு படமாக இல்லாமல், அவர் செய்த நல்ல விஷயங்களை மட்டும் வைத்து படம் உருவாவதாகக் கூறப்படுகிறது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் சூர்யா இரு கைகளை விரித்துக்கொண்டு வானை நோக்கி பறப்பது போல் இருந்தார்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் சூர்யாவும் சிட்டுக் குருவி ஒன்றும் இருக்கிறது. சூர்யா சிட்டுக் குருவி போல பறப்பதற்கு ஆசைப்படுவது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் வெளியான உடன் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படத்தின் டீசர் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com