\
சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் : வாடிவாசல் படத்திற்கான தோற்றமா ?

சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் : வாடிவாசல் படத்திற்கான தோற்றமா ?

சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் : வாடிவாசல் படத்திற்கான தோற்றமா ?
Published on

வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திற்காகத் தயாராகி வருகிறார் சூர்யா. தற்போது அவரது ரசிகர்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி விவாதத்தை உருவாக்கியுள்ளன. அந்தப் படங்களில் தெரியும் சூரியாவின் தோற்றம் வாடிவாசல் படத்திற்காக இருக்கலாம் எனத் தெரிகிறது.

சூர்யாவின் லேட்டஸ்ட் தோற்றம் பற்றிய உரையாடல்கள் சமூக வலைதளங்களில் தொடர்கின்றன. இதுபோன்று அவர் எப்போதும் காணப்பட்டதில்லை. இதுவே முதல் முறை. லேசான தாடியும் தலைமுடியை நீளமாகவும் வளர்த்து படிய சீவியிருக்கும் காட்சி புதுமையானதாக இருக்கிறது. வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக், அவரது 45 வது பிறந்தநாளின்போது வெளியிடப்பட்டது. அதில் கனமான தோற்றத்தில் காணப்பட்டார்.

சி. சு. செல்லப்பா எழுதிய புதினத்தை அடிப்படையாக வைத்து வாடிவாசல் படத்தை உருவாக்கிவருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். இந்தக் கதை ஜல்லிக்கட்டு போட்டியை விவரிப்பதாக இருக்கும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com