சூர்யா
சூர்யாட்விட்டர்

‘புயலை கிளப்ப வரும் வாரியர்’ - சூர்யாவின் 42வது படத்தின் டைட்டில், ரிலீஸ் தேதியின் அறிவிப்பு எப்போது?

சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
Published on

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் மட்டும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வந்தார் சூர்யா. ஆனால், சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விலகினார். மேலும், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகி வந்ததால், தற்போது சிறுத்தை சிவாவின் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

சூர்யா
3 நாட்களாக தொடர் விருது மழையில் நனைந்த ‘மல்லிப்பூ’ பாடகி மதுஸ்ரீ - தமிழுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வைத்த கோரிக்கை!

சூர்யாவின் 42-வது படம் என்பதால், ‘சூர்யா 42’ என்று இப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டு, இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கோவா மற்றும் பிஜூ தீவில் நடைபெற்றன. தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் படத்தை 10 மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு மோஷன் போஸ்டருடன் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அறிவித்திருந்தது.

மோஷன் போஸ்டர் மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் - விஜய் - அனிருத் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான வியாபார சாதனையை, சூர்யாவின் ‘சூர்யா 42’ திரைப்படம் முறியடித்துள்ளதாக அண்மையில் ஒரு தகவல் உலா வந்தது. ஆனால், இதனை படக்குழு மறுத்திருந்தது. சூர்யாவின் படங்களிலேயே, ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் இந்தப் படம் மிக முக்கியமானது என்று மட்டுமே படக்குழு தெரிவித்திருந்தது.

சூர்யா
“படத்தில் ஆயிரம் குறைகள் இருக்கு.. அதையெல்லாம் கடந்து ’விடுதலை’யை நீங்கள் கொண்டாடுவது..!” - வெற்றிமாறன் பேச்சு

இந்தநிலையில், ‘சூர்யா42’ படத்தின் டைட்டில் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 16-ம் தேதி (16.04.2023), காலை 9.05 மணிக்கு டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளதுடன், ட்விட்டரில் ட்ரெண்டாக்கியும் வருகின்றனர். அதேநேரத்தில் இந்தப் படத்திற்கு தனது வழக்கமான ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய ‘வி’ சென்டிமெண்டை தவிர்த்துவிட்டு, ‘அக்னீஸ்வரன்’ என்றப் பெயரை இயக்குநர் சிறுத்தை சிவா தேர்வு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. எனினும், வரும் 16-ம் தேதியே படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் அறிவிப்பு வெளிவரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com