சூர்யாவின் ‘என்ஜிகே’டீசர் எப்போது வெளியாக உள்ளது என தகவல் கசிந்து வருகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘என்ஜிகே’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி அன்று திரைக்கு வரும் என அறித்திருந்தது படக்குழு. ஒரு படத்திற்கான வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டு படத்தின் படப்பிடிப்பை தொடங்கவே இரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் முதன்முறையாக செல்வராகவனுக்கு வந்துள்ளது. பொதுவாக அவரது படங்கள் வெளிவருவதில் பல தாமதங்கள் நிலவும். அவர் படப்பிடிப்பை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்காமல் இழுத்து கொண்டிருக்கிறார் என பல முறை அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த வதந்தியை உடைக்கவே அவர் ரிலீஸ் தேதியை குறித்துவிட்டு படப்பிடிப்பை இந்த முறை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ‘என்ஜிகே’ படத்தின் டீசர் எப்போது வெளியாகலாம் என்பது குறித்த தகவலை அரசல்புரசலாக வெளியிட்டுள்ளார். அதன்படி படத்தின் டீசர் வரும் ஜீன் மாதத்தில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. அதற்கான அறிவிப்பு முறைப்படி விரைவில் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.