தனி படமாகவே உருவாகும் 'ரோலக்ஸ்' - சூர்யா கொடுத்த டபுள் மாஸ் அப்டேட்! இரட்டை மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

'விக்ரம்' படத்தின் தான் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் தனி திரைப்படமாக உருவாக இருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
ரோலக்ஸ்
ரோலக்ஸ்Twitter

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த படம் 'விக்ரம்'. இதில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்படம் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்திருந்தது. மேலும் விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் ரோலக்ஸ் கேரக்டரை படம் வெளியாகும் வரை மிகவும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தது படக்குழு. அதனால், படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் சூர்யா தன்னுடைய நடிப்பால் மிரட்டி ரசிகர்களுக்கு கூடுதலாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருப்பார்.

இந்நிலையில் 'ரோலக்ஸ்' என்ற கேரக்டரை வைத்து தனி திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் சூர்யா கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா அண்மையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததாகவும், அவர் அப்போது தனது அடுத்த படங்கள் குறித்த சில தகவல்களை கூறியதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

ரோலக்ஸ்
ரோலக்ஸ்

ரசிகர்கள் மிக ஆர்வமாக கேட்டு வந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து முழு படம் ஒன்றை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவரிடம் இந்தப் படத்தின் கதையை கேட்டதாகவும் தனக்கு கதை பிடித்திருந்ததாகவும் கூறியுள்ளார் சூர்யா. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதேபோல், மற்றொரு இன்ப அதிர்ச்சியும் கொடுத்தார். அதாவது, ரோலக்ஸ் கதையோடு ‘இரும்புக்கை மாயாவி கதையையும் லோகேஷ் கூறியுள்ளதாகவும் ரோலக்ஸ் முடிந்த உடன் அந்த படமும் உருவாகும் என்று கூறி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.

தற்போது சூர்யா ‘கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் குறித்து ரசிகர்களிடம் சூர்யா கூறிய போது, நீங்கள் எதிர்பார்ப்பதை விட 100 மடங்கு இந்த படம் சிறப்பாக இருக்கும் என்றும் உற்சாகம் பொங்க கூறியுள்ளார். மேலும் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டுக்கு பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com