\
ஒய்எஸ்ஆர் மகன் கேரக்டரில் நடிகர் சூர்யா?

ஒய்எஸ்ஆர் மகன் கேரக்டரில் நடிகர் சூர்யா?

ஒய்எஸ்ஆர் மகன் கேரக்டரில் நடிகர் சூர்யா?
Published on

ஒய்எஸ்ஆர் மகன் கேரக்டரில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. அது குறித்து மேலும் சில விவரங்கள் தெரிய வந்துள்ளன.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர். அவர் திடீரென்று 2009 ஆண்டு ஒரு ஹெலிக்காப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன் பிறகு அரசியல் வட்டாரத்தில் அவருக்கு மாபெரும் அனுதாப அலை வீச ஆரம்பித்தது. இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகின்றனர். அவரது 25 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை எடுத்து பேச உள்ள இப் படத்திற்கு ‘யாத்ரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒய்எஸ்ஆர் பாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் சில நாட்களாக முன்பாக வெளியிடப்பட்டது. ஒய்எஸ்ஆர் கேரக்டரில் மம்முட்டி நடிக்க இருக்கும் நிலையில் ஒய்எஸ்ஆர் மகன் ஜெகன் கேரக்டரில் நடிகர் சூர்யா நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் இப்படத்தில் ஜெகன் கேரக்டரில் சூர்யா நடிக்கவில்லை என்று படக்குழு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து சூர்யாவிடம் எந்தப் பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை என்றும் இது முற்றிலும் தவறான செய்தி என்றும் கூறப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com