\
‘இந்தியில் ரீமேக் ஆகும் சூரரைப் போற்று’: சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரிப்பு

‘இந்தியில் ரீமேக் ஆகும் சூரரைப் போற்று’: சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரிப்பு

‘இந்தியில் ரீமேக் ஆகும் சூரரைப் போற்று’: சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரிப்பு
Published on

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ இந்தியில் ரீமேக் ஆகிறது.

கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயகக்கத்தில் ‘சூரரைப் போற்று’ தீபாவளியையொட்டி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு படமாக்கினார் சுதா கொங்கரா. இவரின் அடுத்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்தியில் ‘சூரரைப் போற்று’ படத்தை அவர் இயக்கப்போகிறார்.

இதனை, நடிகர் சூர்யா,ஜோதிகா, ராஜசேகர் பாண்டியன், அபடண்ட்ஷியா எண்டர்டைன்மெண்ட் உள்ளிட்டவர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள். விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் விபரம் வெளியாகும். இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com