\
சூர்யா படத்திற்கும் தனது ‘வி’ சென்டிமென்ட்டை கையிலெடுக்கும் சிறுத்தை சிவா? - வெளியான தகவல்

சூர்யா படத்திற்கும் தனது ‘வி’ சென்டிமென்ட்டை கையிலெடுக்கும் சிறுத்தை சிவா? - வெளியான தகவல்

சூர்யா படத்திற்கும் தனது ‘வி’ சென்டிமென்ட்டை கையிலெடுக்கும் சிறுத்தை சிவா? - வெளியான தகவல்
Published on

நடிகர் சூர்யாவின் ‘சூர்யா 42’ படத்திற்கு, தனது டிரேட் மார்க் சென்டிமென்ட் டைட்டிலான ‘வி’ யில் துவங்கும் வகையில் புதிய டைட்டிலை ‘சிறுத்தை’ சிவா தேர்வு செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா படத்தில் நடிக்கவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தப் படத்திற்கான பூஜையும் சமீபத்தில் போடப்பட்டு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து கோவாவில் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. இதற்கிடையில் பாலாவின் ‘வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

எனினும் சிறுத்தை சிவாவின் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தொடர்ந்து நடித்து வந்தார். தற்காலிகமாக ‘சூர்யா 42’ என பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மிரட்டலான சிஜியில், அதிரடி பின்னணி இசையில் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. வாரியர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் படத்தை 10 மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்தநிலையில், தற்போது இந்தப் படத்திற்கு ‘வீர்’ என்று சிறுத்தை சிவா பெயரிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அஜித் நடிப்பில் இவர் இயக்கிய வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகியப் படங்கள் எல்லாம் ‘வி’ வரிசையில் டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதேபோன்று ‘வி’ சென்டிமென்ட்டில் சூர்யா படத்திற்கும் இயக்குநர் சிறுத்தை சிவா தலைப்பிட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com