கே.வி.ஆனந்த் இயக்கும் சூர்யா படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்ஜிகே’ படப்பிடிப்பை நடிகர் சூர்யா முழுமையாக முடித்து கொடுத்துவிட்டார். ஆகவே இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க அவர் தயாராகி வருகிறார். இந்தப் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்புக்கள் சில தினம் முன்பு லண்டனில் தொடங்கியது. அதற்காக சூர்யா லண்டன் சென்றார். ஆனந்த் இயக்கத்தில் சூர்யா ஏற்கெனவே ‘அயன்’, ‘மாற்றான்’ ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார். சூர்யாவும் ஆனந்தும் மூன்றாவது முறையாக இணைய உள்ளனர். இதில் மலையாள திரை உலக உச்ச நடிகர் மோகன் லால் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு விஜய்யின் ‘ஜில்லா’ படத்தில் இவர் நடித்த பிற்பாடு இப்போது மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார். அதனை அடுத்து தெலுங்கு ஹீரோ அல்லு சிரிஷ் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதனை அல்லு அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். மேலும் சூர்யாவுடன் நடிக்க ஆவலுடன் இருப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தார். பாலிவுட் ஆக்டர் போமன் இரானி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இவர் முன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், ஹேப்பி நியூ இயர் போன்ற படங்களில் நடித்தவர். சூர்யா படத்தின் கதையைக் கேட்டுவிட்டு அவர் உற்சாகமாக நடிக்க முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ஆர்யா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் படத்தை போமன் ஹிரானி எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “ மிக்க நன்றி போபன் ஹிரானி சார். இது மிகச் சிறந்த புகைப்படம்” என குறிப்பிட்டுள்ளார். ஆர்யாவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் நட்சத்திர அந்தஸ்து அதிகரித்துக் கொண்டே போகிறது.
சூர்யாவின் 37 வது படமான இதனை லைகா புரடெக்ஷன் மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்தப் படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் லண்டன், பிரேசில், நியுயார்க், ஹைதராபாத், டெல்லி போன்ற இடங்களில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.