\
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா
Published on

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.

தற்போது சூர்யா ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து அவர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்துள்ளது. இது சூர்யாவுக்கு 36 வது திரைப்படம். ஆகவே இந்தப் படத்திற்கு சூர்யா 36 என்று ட்விட்டரில் ஹேஷ்டேக் இடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு உறுதியாகும் வரை இந்த ஹேஷ்டேக் புழக்கத்தில் இருக்கும்.

இந்தப் படத்திற்கான பூஜை புகைப்படங்களை, இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இன்று காலையில் நடைபெற்ற பூஜையில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவர இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தினை ட்ரீம்வாரியர் தயாரிக்க உள்ளது. இதில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் பிரபு நடிக்க உள்ளார். மேலான கலைஞர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com