”லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா; ஆல்வேய்ஸ் பி ஹேப்பி! - ’மாஸ்டர்’ லுக்கில் சுரேஷ் ரெய்னா!

”லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா; ஆல்வேய்ஸ் பி ஹேப்பி! - ’மாஸ்டர்’ லுக்கில் சுரேஷ் ரெய்னா!

”லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா; ஆல்வேய்ஸ் பி ஹேப்பி! - ’மாஸ்டர்’ லுக்கில் சுரேஷ் ரெய்னா!
Published on

ஐபிஎல் போட்டிகள் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், ’லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, ஆல்வேஸ் பி ஹாப்பி’ என்று பதிவிட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா!

14 ஆவது ஐபிஎல் சீசன் வரும் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா ஆகிய 6 ஊர்களில் இப்போட்டிகள் நடக்கின்றன. கொரோனா நாடெங்கும் அதிகரித்துள்ள இச்சூழலில் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து போட்டிகளை காண தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தொடரில் பங்குபெறும் வீரர்கள், பயிற்சியாளர்கள், அம்பயர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு தொற்று ஏற்படாத வண்ணம் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீரர்களும் மும்மரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலின் “லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, ஆல்வேய்ஸ் பி ஹாப்பி” என்று செம்ம்ம்ம கூலாக உற்சாகமுடன் விஜய்யின் மாஸ்டர் லுக்கில் புகைப்படங்களையும் பதிவிட்டு தெறிக்கவிட்டுள்ளார்.

ஏற்கனவே, ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com