\
போலி  இணையதளம்
போலி இணையதளம்முகநூல்

நடிகர் அஜித் பெயரில் ரேசிங் இணையதளம்... உண்மையா பொய்யா? சுரேஷ் சந்திரா சொன்னது என்ன?

நடிகர் அஜித் பெயரிலான ரேசிங் என்ற இணையதளம் போலியானது என, அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.
Published on: 

நடிகர் அஜித் பெயரிலான ரேசிங் என்ற இணையதளம் போலியானது என, அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.

நடிகர் அஜித் கார் பந்தயங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அஜித்குமார் ரேசிங் என்ற பெயரில் அணியையும் உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் அந்த அணி சார்பாக, அஜித்குமார் ரேசிங் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், அந்த இணையதளம் அதிகாரப்பூர்வமானது அல்ல என, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

போலி  இணையதளம்
வசூல் மன்னனா? நல்ல பிசினஸ்மேனா? சிவகார்த்திகேயன் வெற்றிக்கு காரணம் என்ன?

அந்த தளத்தை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள அவர், அஜித் தொடர்பான அறிவிப்புகள், அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே வெளியாகும் எனவும் கூறியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com