தள்ளிப்போகிறதா ‘சூரரைப் போற்று’ வெளியீட்டு தேதி ? காரணம் என்ன?

தள்ளிப்போகிறதா ‘சூரரைப் போற்று’ வெளியீட்டு தேதி ? காரணம் என்ன?

தள்ளிப்போகிறதா ‘சூரரைப் போற்று’ வெளியீட்டு தேதி ? காரணம் என்ன?
Published on

அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

 ’இறுதிச் சுற்று’ வெற்றிப்பட இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ’சூரரைப் போற்று’ படம் விமான தளத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து பாடல்களும் ஹிட் ஆகிவிட்டன.

கோரோனா ஊரடங்கால் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவிருந்த நிலையில், தற்போது வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமானக்கதை என்பதால் இந்திய விமானத்துறையிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும். ஆனால், படக்குழு இன்னும் அனுமதி வாங்கவில்லை. வரும் அக்டோபர் 25 ஆம் தேதிக்கு முன்னர் அனுமதிபெறத் தவறினால், படத்தின் தேதியை அமேசான் ப்ரைம் ஒத்தி வைக்க வாய்ப்புள்ளது.

அதோடு, இன்னும் படத்திற்கான விளம்பரங்களை படக்குழு சரியாக செய்யவில்லை. இதுவரை படத்தின் ட்ரைலர், ஒரு மோஷன் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது. மூன்று பாடல்கள் வெளியாகவில்லை.

இதனால், படம் வெளியாக இன்னும் கால தாமதமாகும் என்று திரைத்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, இப்படி படத்தின் தேதிகளை ஒத்தி வைப்பது அமேசான் ப்ரைமுக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே,  பலப்படங்களுக்கு இதுப்போல் நடந்துள்ளள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com