’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை பாராட்டிய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட்!

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை பாராட்டிய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட்!
’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை பாராட்டிய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட்!

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் பாராட்டி இருக்கிறார்.

சமீபத்தில் கருத்தியல் ரீதியில் தென்னிந்திய ரசிகர்களிடமும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இயக்குநர் ஜியோ பேபி இயக்கிய இந்த சினிமா Neestream தளத்தில் வெளியானது. தற்போது அமேசான் பிரைமிலும் கிடைக்கிறது. இந்தியாவைப் பொருத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்த 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை பல பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். சீனாவில் நடக்கும் 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’திரையிடவும் தேர்வாகி இருக்கிறது.

இந்நிலையில், சபரிமலை கோயில் வழக்கில் “கோயில் வழிபாடுகளில் பெண்களிடம் பாகுபாடு பார்க்கக்கூடாது. பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள். வழிபாடு செய்ய அவர்களின் உரிமையை மறுப்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும்” என்று தீர்பளித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருவரான டி.ஒய் சந்திசூட் பாராட்டிய வீடியோவை இயக்குநர் ஜியோ பேபி தனது பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில் ”சமீபத்தில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவுக்கு திரையிட தேர்வான ‘கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தைப் பார்த்தேன். திருமணம் செய்துகொண்டு வரும் பெண் தனது புகுந்த வீட்டில் வீட்டுவேலைகள் செய்வது, ஊதியமில்லாத அந்த வேலையில் நன்றி மறக்கும் குடும்பத்தினர். அதன்பின்னர் எழும் கோபங்களை இப்படம் அடுக்கடுக்காக பட்டியலிட்டுள்ளது. தனக்கு விருப்பமான பணியை தொடர லட்சியத்திற்கு தடையாய் இருப்பதும், மாதவிடாயின் போது தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்வது என படத்தை மிக ஆழமாக எடுத்துள்ளார்கள். அதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் காட்சிகளை அமைத்து எதார்த்தமாக கொடுத்துள்ளார்கள்” என்று பாராட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com