\
சுஷாந்த் மரணம்: ரியாவுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடையில்லை : உச்சநீதிமன்றம்

சுஷாந்த் மரணம்: ரியாவுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடையில்லை : உச்சநீதிமன்றம்

சுஷாந்த் மரணம்: ரியாவுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடையில்லை : உச்சநீதிமன்றம்
Published on: 

நடிகர் சுஷாந்த் மரண விவகாரத்தில், நடிகை ரியாவுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அவரது தற்கொலை தொடர்பான வழக்கை போலீஸ் விசாரித்து வருகிறது. இதேபோல், சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில், அவரது காதலியான ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலி ரியா, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், அவரது மேலாளர் சாமுவேல் மிரான்டா, ஸ்ருதி மோடி ஆகிய 6 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல், நம்பிக்கை மோசடி, திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சுஷாந்த் தற்கொலையில் நடிகை ரியாவுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தற்கொலைக்கு தூண்டியதாக பீகாரில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு ரியா மீதான குற்றச்சாட்டு கடுமையானது எனவும் தெரிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com